குஷ்பு இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் தடுத்து நிறுத்தம்: போலீசார் குவிப்பு..!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (11:01 IST)
குஷ்பு இல்லத்தை இன்று காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்ற நிலையில் 100 மீட்டருக்கு முன்னதாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
 
நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு சமீபத்தில் சேரி என்ற வார்த்தையை தனது சமூக வலைதளத்தில் பயன்படுத்தியதாகவும் அவர்  தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்து விட்டதாகவும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. 
 
மேலும் குஷ்பு இதற்காக மன்னிப்பு கேட்க விட்டால் அவருடைய வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று குஷ்பு இல்லத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்ற போது 100 மீட்டருக்கு முன்னதாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் 
 
மேலும் குஷ்பு இல்லத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதனால் குஷ்பு வீட்டின் அருகே சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்