டெல்லியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரூ.25 லட்சம்.. காங்கிரஸ் வாக்குறுதி..!

Mahendran
புதன், 8 ஜனவரி 2025 (16:21 IST)
டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தல் 25 லட்சம் மருத்துவ காப்பீடு அனைவருக்கும் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
 
இந்த நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவிவரும் நிலையில், மூன்று கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு வாக்குறுதியை அள்ளித்தந்து கொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில் ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் 25 லட்சம் மருத்துவ காப்பீடு டெல்லியில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
 
இந்த திட்டத்தின் கீழ் 25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும் என்றும், இதனால் பொதுமக்கள் செலவு இன்றி மருத்துவம் செய்து கொள்ளலாம் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே, பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் மகளிர் உதவி தொகை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்