ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு.. காங்கிரஸ், விசிக கருத்து..!

வெள்ளி, 7 ஜூலை 2023 (12:35 IST)
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருடைய எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உள்ளனர். 
 
பிரதமர் மோடியோ பாஜகவோ ஒரு பெயரை கண்டால், ஒரு உருவத்தை கண்டால் அச்சப்படுகிறார்கள் என்றால் அது ராகுல்காந்திதான் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
 
எதிர்க்கட்சிகளை ராகுல் காந்தி ஒருங்கிணைக்கிறார் என்பதனை பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்