ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு.. தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

வெள்ளி, 7 ஜூலை 2023 (11:38 IST)
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என ராகுல் காந்தி மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு கடந்த சில நாட்களாக விசாரணை நடந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்தபோது மோடி என்ற பெயர் வைத்தவர்கள் எல்லாம்திருடர்களாக இருக்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். 
 
இதனை அடுத்து அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த நிலையில் இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது. 
 
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்றும் அதில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்