டீலா? நோ டீலா? மார்க்சிஸ்ட் கறார்; குழப்பத்தில் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (14:51 IST)
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளுக்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளன. 
 
அதிமுக, பாஜகவிற்கு 5 தொகுதி, பாமகவிற்கு 7 தொகுதி என தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்தாலும், தேமுதிக முரண்டு பிடிப்பதால் அந்த கட்சியுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது. 
 
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 
முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திருப்பூர், கன்னியாகுமரி அல்லது மதுரை, கோவை தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. 
 
இதற்கு திமுக தரப்பில் மற்ற கூட்டணி கட்சிகளுசன் பேசி முடிவெடுப்பதாக கூறப்பட்டுள்ளதாம். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இன்று நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாக தெரிவித்தார். 
 
அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதால், யாருக்கு எங்கு எத்தனை தொகுதி கொடுப்பது என திமுக தலைவர் ஸ்டாலின் மற்ற முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்