முரண்டுபிடிக்கும் தேமுதிக: பெல் பிரதர்ஸுடன் எடப்பாடியார் அவசர ஆலோசனை

வியாழன், 21 பிப்ரவரி 2019 (11:27 IST)
தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜவோடுக் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவிற்கு 5 இடம் கிடைத்துள்ளது. 
 
பாமகவிற்கே 7 சீட்டுகள் கொடுத்தபோது தங்களுக்கு 9 சீட் வேண்டும் என தேமுதிக ஸ்ட்ரிக்டாக கூறியுள்ளதாம். ஆனால் அதிமுக தேமுதிகவிற்கு 6 சீட் தான் கொடுக்க முடியும் என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. 
 

இந்நிலையில் தேமுதிக கூட்டணி பங்கீடு தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மறுபக்கம் கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அலுவலகலத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.விரைவில் தேமுதிக - அதிமுக கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்