கோவையில் குடும்பங்களை குறிவைத்து பரவும் கொரோனா? – அதிகாரிகள் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (10:28 IST)
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்தியா முழுவதும் கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் முதலாக தற்போது வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குறைந்த வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

முக்கியமாக கோயம்புத்தூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கோயம்புத்தூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் முன்னதாக தனிநபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவரது குடும்பத்தினருக்கும் சோதனை மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குடும்பம் குடும்பமாக பரவி வருகிறது.

தற்போது கோவையில் பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50க்கும் குறைவாகவே இருந்தாலும் அதில் 3 முதல் 5 குடும்பங்கள் வரை மொத்தமாக பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்