இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் – இன்றைய நிலவரம்!

செவ்வாய், 9 மார்ச் 2021 (10:00 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 16,000 நெருங்கி பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,12,44,786 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,57,930 ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும் கடந்த 24  மணி நேரத்தில் 16,596 கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,08,99,394 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானவர்களின் நாடு முழுவதும் தற்போது 1,87,462 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்