நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய கூடுதல் அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (13:59 IST)
தூத்துக்குடி, நெல்லை மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் உட்பட 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அமைச்சர் எ.வ. வேலு, காயல்பட்டினம் பகுதிக்கு அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு  அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும் மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இணைப்புச் சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் முலமே மீட்க முடிகிறது என்றும், பாதிப்பு அதிகம் உள்ளதால் பேரிடரின் தன்மையை கருத்தில் கொண்டு நடவடிக்கை தேவை என்றும் அதனால் மீட்புப் பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்