சர்வாதிகாரியாக மாறுவேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (14:44 IST)
நான் சாஃப்ட் முதலமைச்சர் என யாரும் கருத வேண்டாம் என்றும் தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நேர்மையானவர்களுக்கு மட்டும் தான் நான் சாஃப்ட் முதலமைச்சர் என்றும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை போனால் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகம் எந்தத் துறையில் வேண்டுமானாலும் வளர்ச்சி அடையலாம், ஆனால் போதைப்பொருள் விஷயத்தில் வளர்ச்சி அடைய கூடாது என்பதை தனது எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்