பிரதமர் தமிழகம் வரும் மறுநாள் டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

Mahendran
செவ்வாய், 28 மே 2024 (11:12 IST)
பிரதமர் மோடி மே 31ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்ற நிலையில் அதற்கு மறுநாள் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்திய கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அதன்பின் ஜூன் 2ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார் 
 
கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை செய்யவுள்ளனர். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்