இந்தியா கூட்டணியால் நாட்டை வலுப்படுத்த முடியுமா.? பிரதமர் மோடி கேள்வி..!

Senthil Velan

ஞாயிறு, 26 மே 2024 (13:36 IST)
இந்தியா கூட்டணியால் நாட்டை வலுப்படுத்த முடியுமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வீழ்ச்சியடைந்து வரும் கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.
 
மேலும் இந்தியா கூட்டணியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் வகுப்புவாத மற்றும் மதவாத அரசியலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரதமர் விமர்சித்தார். 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்குவோம் என இந்தியா கூட்டணியினர் கூறுவதாகவும், அவர்களால் நாட்டை வலுப்படுத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ALSO READ: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து.! லாரி மோதியதில் 11 பேர் பலி..!!
 
மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும்  முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு வங்கி அரசியல் செய்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்