இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் மனு

Mahendran

திங்கள், 27 மே 2024 (10:49 IST)
தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு செல்லும் வகையில் ஜூன் 1ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் வரும் 1ஆம் தேதியுடன் இடைக்கால ஜாமின் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமினை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அரவிந்த் அகர்வால் ஜாமினில் வெளிவந்த பின்னர் அவர் ஆற்றிய தேர்தல் பிரச்சார கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அவருடைய தேர்தல் பிரச்சாரம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அன்றைய தினத்துடன் அவரது ஜாமினும் முடிவடைவதால் உடல்நிலையை காரணம் காட்டி மேலும் ஒரு வாரத்துக்கு அவர் தனது ஜாமினை நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்