காணாமல் போனவர்களை உடனே கண்டுபிடியுங்கள்: தமிழக குழுவுக்கு முதல்வர் உத்தரவு

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (11:00 IST)
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 10 தமிழர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காணாமல் போனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
 
முன்பதிவு செய்த பட்டியலின் கணக்கின்படி 10 தமிழர்கள் குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் பேருந்தில் தமிழகம் திரும்பி விட்டார்களா அல்லது இடிபாடுகளில் சிக்கிவிட்டார்களா என்பதை குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.
 
இந்த நிலையில் காணாமல் போன 10 தமிழர்களை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 
 
இதன் அடிப்படையில் தமிழக குழு தற்போது ஒடிஷா மாநில முதல்வரிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்