பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை: முதல்வர் முக்கிய ஆலோசனை..!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (09:26 IST)
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம்  குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 எங்களுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை ரூபாய் 1000 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்
 
நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில், மகளிர் உரிமை தொகை திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் நிலையில் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்