ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு... மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (07:52 IST)
சென்னையில் உள்ள ராஜ்பவனில் காலை 11 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
 
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இதனிடையே சென்னையில் உள்ள ராஜ்பவனில் காலை 11 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்