உலக தமிழர்களே ஒன்று கூடுங்கள்; நிதி வழங்குங்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (13:21 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவையும் நிலவி வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாடு வாழ் தமிழர்களும் நிதி வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்துள்ளது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதனால் திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதி வழங்குங்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுங்கள். நிதியுதவி செய்பவர்கள் விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்