கொரோனா தடுப்புநிதியாக ரூ.5 கோடி கொடுத்த முன்னணி நிறுவனம்!

வியாழன், 13 மே 2021 (12:39 IST)
கொரோனா தடுப்புநிதியாக ரூ.5 கோடி கொடுத்த முன்னணி நிறுவனம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா தடுப்பு நிதியாக தாராளமாக கொடுக்க முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார் 
 
இதனை அடுத்து சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் ஒரு கோடி கொடுத்தனர் என்பதும் இன்று திமுக அறக்கட்டளையில் இருந்து ரூபாய் ஒரு கோடி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 5 கோடி ஜோஹோ நிறுவனம் கொடுத்துள்ளது
 
இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குமார் வேம்பு அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இந்த நிதியை கொடுத்தார். இதனையடுத்து ஜோஹோ நிறுவனத்திற்கு தமிழக அரசு தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்