அப்பட்டமான பொய்யை அவையில் அவிழ்த்து விட்ட எடப்பாடி: ஸ்டாலின் காட்டம்!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (13:21 IST)
கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தான் போலீசாரை தாக்கினர் எனவும், போலீசார் பொதுமக்கள் மீது எந்த வன்முறையையும் நடத்தவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று கூறினார்.


 
 
முதலமைச்சரின் இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி காட்சியை தொலைக்காட்சிகளில் மக்கள் அனைவரும் பார்த்தனர். ஆனால் முதல்வரோ பொதுமக்கள் தான் போலீசாரை தாக்கினர் என சட்டசபையில் கூறுகிறாரே என அனவரும் அதிருப்தியடைந்தனர்.
 
இந்நிலையில் திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுமக்கள் போலீஸை தாக்கியதாலும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாலும், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழக அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்ததாலும் கைது செய்யப்பட்டார்கள் என்று ஒரு அப்பட்டமான பொய்யை அவையில் அவிழ்த்து விட்டுள்ளார் என கூறியுள்ளார்.
 
மேலும், உண்மைத் தகவலைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒப்பற்ற சட்டமன்றத்தில், இப்படிப் பூசி மெழுகிப் பொய் தகவலை பதிவுசெய்வது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. வீடியோ ஆதாரங்கள் உள்ள விஷயங்களில் கூட இவ்வளவு முரட்டுத்தனமான பொய்த் தகவலை முதல்வர் கூறியுள்ளார் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்