மதுரையை உலுக்கிய தீ ஜவுளி கடை விபத்து: எடப்பாடியார் நிதியுதவி!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (08:01 IST)
பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட்டார். 
 
மதுரையில் உள்ள விளக்குத்தூண் பகுதியில் நவபத் கானா தெருவில், துணிக்கடை ஒன்று உள்ளது. அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக துணிகளின் மூலம் பரவ ஆரம்பித்தது.
 
இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் கிருஷ்ணமூர்த்தி (30), சிவராஜன் (36) ஆகிய இரண்டு தீயணைப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட்டார். அதாவது, உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா பதினைந்து லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்