கலைக்கட்டும் ஓபிஎஸ் உண்ணாவிரத போராட்டம்: தனுஷ், விஜய் ஆண்டனி பாடல்கள்!!

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (12:08 IST)
பன்னீர்செல்வம் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்ட மேடையில், தாயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.


 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் பன்னீர்செல்வம் அணியினர், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி தமிழகம் மற்றும் புதுவை உள்பட சுமார் 36 இடங்களில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
 
இந்த உண்ணாவிரதப் போராட்ட மேடையில், பெற்ற தாயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
 
இதனால், பிச்சைக்காரன் திரைப்படத்தில் இருந்து, நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா..., வேலை இல்லா பட்டதாரி படத்தில் இருந்து அம்மா அம்மா நீ எங்க அம்மா..., ஆகிய பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றது.
 
அடுத்த கட்டுரையில்