அதிமுகவை அழிக்க ஸ்டாலின் சதி செய்கிறார் - பழனிசாமி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (18:17 IST)
அதிமுகவை அழிக்க முதலமைச்சர் ஸ்டாலின் சதி செய்து வருவதாக அதிமுக கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்  இடையே நடைபெற்ற சர்ச்சையின் உச்சகட்டமாக என்று பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதுமட்டுமின்றி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது அதிமுகவில் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,  அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் காயம் அடைந்த தொண்டர்களை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார் பழனிசாமி.

அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது, அலுவலகத்திற்குள் சமூக விரோதிகள் புகவாய்ப்புள்ளது என தகவல் வந்தவுடன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம்.  ஆனால், எங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிகவில்லை. அதிமுக அலுவலகத்திற்குள் ர்வுடிகளை அழைத்து வந்து நிர்வாகிகளைத் தாக்கிய  பன்னீர் செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது.  அதிமுகவில் உயர்ந்த பதவி வகித்த வர் செய்த செயல் வேதனைக்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் துரோகிகளுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியுள்ளது நீரூபனமாகியுளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வேண்டுமென்றே சீல் வைத்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலம் தலைமை அலுவலகம் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்