அற்புத மருத்துவ பயன்களை தரும் ஆகாச கருடன் கிழங்கு !!

திங்கள், 11 ஜூலை 2022 (18:10 IST)
ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும்.


ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும்.

இக்கிழங்கை கண்திருஷ்டி தோஷம் நீங்கப் பயன்படுத்துவர். இக்கிழங்கினை வீடு மற்றும் கடை வாசல்களில் கட்டித் தொங்கவிடுவர். இது முளைவிட்டு வளரும். அப்படி வளர்ந்தால் நல்லது. இல்லையெனில் கெடுதல் என்று நம்புகின்றனர்.

பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும்படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும்.  விடம் முறிந்து நோயாளி குணமடைவான்.

கிழங்கை தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து, ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு, உப்பு, புளி நீக்கி சாப்பிட பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்