தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (21:17 IST)
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டது.

தற்போது சில தளர்வுகள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர்  அறிவித்துள்ளதாவது:  கொரொனா 3 வது அலைப்பரவலைத் தடுக்க வேண்டி மக்கள் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கொரொனா விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும்  அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்..பண்டிகை காலத்தில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்…பொதுக்கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்