தமிழகத்தில் 1 - 8 வரை பள்ளிகள் திறக்க அனுமதி

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (20:53 IST)
தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டது. இதனா ஆன்லைன் வழி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு கொரொனா இரண்டாம் அலை பரவியதை அடுத்து, பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, எப்போது 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் தொடங்கும் எனக் கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில்  , கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம்தேதி முதல்  1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்