மாண்புமிகு முதல்வர் அவர்களது தலைமையிலான கழக அரசு, மக்கள் எளிதில் அணுகக்கூடிய அரசாகத் திகழ்கிறது என அமைச்சர் சக்கரபாணி டுவிட் பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு முதல்வர் அவர்களது தலைமையிலான கழக அரசு, மக்கள் எளிதில் அணுகக்கூடிய அரசாகத் திகழ்கிறது. மக்களுக்கான அரசு என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், மக்களோடு இணைந்து பயணித்து, மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளம் எனும் கருவியைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்யும்போது, அது இன்னும் பலரை சென்றடையும். அரசின் சேவைகளை முழுமையாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியை மேம்படுத்தும் வகையிலான கருத்துகள் இருப்பின் எனக்கு தெரியப்படுத்துங்கள்.
அனைவரும் இணைந்து கழக நல்லாட்சியின் சிறப்பான பயன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வோம். நன்றி! எனத் தெரிவித்துள்ளார்.