மைக்கேல்பட்டியின் நிஜ பெயர் திருக்காட்டுப்பள்ளி: தோலுரிக்கும் வானதி சீனிவாசன்

வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:50 IST)
மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் இன்று திடீரென மைக்கேல் பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களை ஒரு சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறும்படி வற்புறுத்துகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் மதமாற்ற புகார் இல்லை என்கிறது திமுக அரசு, ஆனால் திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரின் பெயரையே மைக்கேல் பட்டி என்று மாற்றிவிட்டார்கள் என்று வானதி ஸ்ரீனிவாசன் அந்த ஊரின் பெயரையே மதமாற்றியதை தோலுரித்துக் காட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து பலர் சதி செய்வது இதன் மூலம் தெரியவந்துள்ளதாக நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்