பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (19:01 IST)
விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் முக.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில்எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்க நாதபுரத்தைச் சேர்ந்த திருமதி, ஜெயசித்ரா க/பெ. அருணாச்சலம் (வயது 24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்