விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாளை முதல் சித்திரை மாதம் பிரதோஷம் – அமாவாசை வழிபாட்டையொட்டி, பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாளை 19 ஆம் தேதி (பிரதோஷம்)செவ்வாய்க்கிழமை , 19 ஆம் தேதி (அமாவாசை) வழிபாட்டை முன்னிட்டு, 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்யலாம் என்றாலும், இதில், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், மற்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டுசெல்ல அனுமதியில்லை என்றும், நீரோடையில் குளிக்கூடாது என்று வனத்துறை கூறியுள்ளது.