செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைக்கும் பணி நடைபெறுவதால், சென்னையில் இன்று அதாவது ஜூலை 30 காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 இரவு 10 மணி வரை மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளான அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
லாரிகள் மூலம் குடிநீர்: அவசரத் தேவைகளுக்கு, பொதுமக்கள் cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தால், லாரிகள் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.