வேளச்சேரி-தரமணி ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (12:01 IST)
வேளச்சேரி-தரமணி ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!
சென்னை வேளச்சேரி-தரமணி பாலம் மற்றும் கோயம்பேடு பாலம் ஆகியவற்றை நவம்பர் 1ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதன்படி இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன் சென்னை வேளச்சேரி தரமணி பாலத்தை திறந்து வைத்தார். இதனையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த பாலம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
அதேபோல் கோயம்பேடு மேம்பாலம் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் மிக முக்கியமான இந்த பாலங்கள் சென்னையில் போக்குவரத்து நெரிசலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்