சென்னை மாநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (21:52 IST)
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து தற்போதைய நிலவரம் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது 
 
இதன்படி மழை நீர் பெருக்கு காரணமாக வியாசர்பாடி சுரங்க பாதை மற்றும் மேட்லி சுரங்க பாதை மூடப்பட்டு உள்ளதாகவும் பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மற்றும் ஸ்டரகான்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி செல்லும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் அந்த வாகனங்கள் மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படுவதாக அறிவித்து உள்ளன
 
மேலும் திருமலைப்பிள்ளை ரோடு காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை
 
பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்