குறைந்த கட்டணம், ஆனால் ரொம்ப லேட்.. சென்னை - திருவண்ணாமலை ரயில் குறித்து பயணிகள்..!

Siva
வெள்ளி, 3 மே 2024 (15:01 IST)
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நேற்று முதல் பாசஞ்சர் ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் ரயில் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். 
 
திருவண்ணாமலையில் இருந்து கிளம்பிய ரயில் சென்னை கடற்கரைக்கு 9.50 மணிக்கு வரவேண்டும்.  ஆனால் ஒரு நாள் கூட சரியாக நேரத்திற்கு ரயில் வந்ததில்லை என்றும் சில நேரம் 10 மணி, 10 மணிக்கு மேலாக தான் வருகிறது என்றும், நேரத்தை மட்டும் சரியாக கடைபிடித்தால் நன்றாக இருக்கும் என்று பயணிகள் தெரிவித்துள்ளார். 
 
திருவண்ணாமலையில் இருந்து சென்னை வர வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே டிக்கெட் என்றும் அதனால் பயணிகளுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது என்றும் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஒரே ஒரு குறை ரயில் சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்றும் பயணிகள் கருத்து தெரிவித்தனர். 
 
மேலும் இதே போல் இன்னும் ஒரு சில ரயில்கள் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்றும் மேலும் ஒரு ரயில் இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும் சில பயணிகள் கருத்து தெரிவித்தனர். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்