தள்ளி போகவில்லை, திட்டமிட்டபடி இயங்கியது.. சென்னை - திருவண்ணாமலை மின்சார ரயில்..!

Siva

வெள்ளி, 3 மே 2024 (06:28 IST)
சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு மின்சார ரயில் நேற்று முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை திடீரென இந்த திட்டம் தள்ளி போனதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இதனால் பயணிகள் ஏமாற்றத்திற்கு உள்ளான நிலையில் அதன் பின்னர் திடீரென நேற்று இந்த ரயில் திட்டமிட்டபடி இயங்கும் என்று தெற்கு ரயில்வே மீண்டும் அறிவித்துள்ளது பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இனிமேல் சென்னை கடற்கரை முதல் வேலூர் கண்டோன் பேங்க் வரை செல்லும் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீடிக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் நேரம் பின்வருமாறு:

சென்னை கடற்கரையிலிருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06033  ரயில் வேலூர் கண்டோன்மெண்ட், பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் என திருவண்ணாமலை வரை இரவு 12.05க்கு சேரும்

அதேபோல தினமும்  திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்