செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்தது சட்டவிரோதம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Siva

வியாழன், 2 மே 2024 (20:43 IST)
மிகப்பெரிய நிலப்பரப்பை செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
புறநகர் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் உள்ள 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் நிலப்பரப்பை செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இன்றைய விசாரணையை அடுத்து மனுதாரர் நிறுவனங்களுக்கு சீல் வைத்தும், கட்டடங்களை இடிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
 
தமிழக அரசுக்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ இவ்வளவு பெரிய நிலப்பரப்பை நீர்பிடிப்பு பகுதி, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடாத பகுதி என அறிவிக்க உரிமை இல்லை  என நீதிமன்றம் தெரிவித்தது.
 
சென்னை பெருநகர இரண்டாவது முழுமைத் திட்டத்தை, இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளை பின்பற்றி மாற்றியமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்