பாலியல் தொழிலுக்காக சிறுமிகள் கடத்தல்! நால்வர் கைது! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (08:40 IST)
சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலுக்காக கடத்திய திரிபுராவை சேர்ந்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தம்பதி சலீமா கத்தூன் மற்றும் அன்வர் உசேன். இவர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனை மற்றும் ப்யூட்டி பார்லரில் வேலை வாங்கி தருவதாக கூறி திரிபுராவில் இருந்து 14 முதல் 17 வயதுடைய நான்கு சிறுமிகளை சென்னை அழைத்து வந்துள்ளனர். அங்கு அவர்களது கூட்டாளிகளான அலாவுதீன் மற்றும் மைமுதீன் என்பவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்கள் சிறுமிகளை பெல்ட், கட்டை உள்ளிட்டவற்றால் அடித்து கொடுமைப்படுத்தியதுடன், பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவும் எடுத்துள்ளனர். அதை இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பின்னர் அவர்களை பெங்களூர் கொண்டு செல்ல விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதுகுறித்து சைல்டு லைனுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைந்த மாவட்ட குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சிறுமிகளை மீட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமிகளை கடத்திய நான்கு பேர் மீது மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்