காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி கொரோனாவால் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (08:38 IST)
காங்கிரஸ் ஆட்சியின் முன்னாள் எம்பி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
 கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி சிங்காரவடிவேல் என்பவர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார். 84 வயதான அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென தஞ்சை தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டு உள்ளது 
இதனை அடுத்து அரசியல் பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்