அதில் “நல்லாட்சியின் நற்பெயரை சிதைத்திட பொய்யை மட்டுமே சொல்லிவரும் அதிமுகவால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ட பாட்டை மக்களிடம் நினைவுப்படுத்துங்கள். நல்லிணக்கமாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள். மக்கள் நலனுக்கு எதிரான இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டை பாழ்ப்படுத்த நினைப்பதை மக்களிடம் எடுத்துக்கூறுங்கள், மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழக மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.