சென்னையில் "போலீசாரை கண்டித்து" திடீர் போராட்டம்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2016 (10:27 IST)
சென்னையில், போலீசாரை கண்டித்து தண்ணீர் லாரி டிரைவர்கள் திடீர் போாராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

 
சென்னையில் பொது மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய, குடிநீர் வாரியத்துடன் லாரிகள் ஓப்பந்தம் செய்யப்பட்டு, தண்ணீர் வழங்கி வருகிறது.
 
இந்த லாரிகள் மிக வேகமாக செல்வதாகவும், சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக காவல்துறை தரப்பில் புகார் கூறப்படுகிறது. மேலும், லாரி டிரைவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
ஆனால், சென்னையில் போக்குவரத்து போலீசார் தங்களிடம் அளவுக்கு மறி லஞ்சம் கேட்பதாக லாரி டிரைவர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டித்து, சென்னையில் குடிநீர் லாரி டிரைவர்கள் இன்று காலை 6 மணி முதல் லாரியில் தண்ணீர் நிரப்பாமல் திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதனால், சென்னையில் இன்று பல பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்த கட்டுரையில்