புயல் கரையை கடக்கும் வரை அனைத்து பூங்காக்களையும் மூடுங்கள்: மாநகராட்சி உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:50 IST)
வங்க கடலில் புயல் சின்னம் தோன்றி உள்ளதை அடுத்து புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
வங்க கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதை அடுத்து இந்த புயல் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 இந்த நிலையில்  கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன மழை எச்சரிக்கை திரும்ப பெறும் வரை பொதுமக்கள் பாதுகாப்பை கருதி பூங்காக்கள் மூடப்படும் என்றும் இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் பூங்காக்கள் திறக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இதனால் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்றே மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்