பணமதிப்பிழப்பு கூட தெரியாத பாட்டிகள்! – குப்பைகளில் கிடைத்த ரூ.2 லட்சம்!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (10:49 IST)
சென்னையில் ஆதரவற்று இருந்த மூதாட்டியின் வீட்டில் 2 லட்ச ரூபாய் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள சத்தியவாணி முத்து நகர் அருகே குடிசை ஒன்றில் மூன்று மூதாட்டிகள் வாழ்ந்து வந்துள்ளனர். அன்றாட உணவு தேவைகளுக்காக குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து அவர்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூதாட்டிகளில் ஒருவர் உடல் அழுகிய நிலையில் நடைபாதையில் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த தலைமை செயலக காலணி காவல் ஆய்வாளர் மூதாட்டியின் உடலை மீட்டு அடக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் மற்ற இரண்டு மூதாட்டிகளும் வீட்டில் தங்காமல் சாலையிலேயே தங்கி வந்துள்ளனர். அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியபோது வீட்டில் தங்குவதற்கே இடமில்லை என கூறியுள்ளனர். இதனால் அவர்களது வீட்டிற்கு சென்ற காவலர்கள் அங்கு குவியலாய் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்து லாரிகள் கொண்டு வந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அந்த குப்பைகளில் சில்லறை காசுகளும், பணமுமாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இதில் பணமதிப்பிழப்பால் செல்லாமல் போன 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 40 ஆயிரம் ரூபாய்க்கு இருந்துள்ளன.

லட்சக்கணக்கில் பணம் இருந்து அது தெரியாமல் மூதாட்டிகள் உணவிற்கே சிரமப்பட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்