சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (07:40 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
நேற்று சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்