மணி விழா கண்ட 70 வயது ஆன்மீக தம்பதிகளுக்கு சிறப்பு விழா! - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

Prasanth Karthick

புதன், 30 ஏப்ரல் 2025 (10:06 IST)

70 வயது தாண்டிய ஆன்மீக தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு விழா நடத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவில் திருப்பணிகளில் மட்டுமல்லாது பல்வேறு புதிய சேவைகளையும் வழங்கி வருகிறது. விழாக்காலங்களில் வயது முதிர்ந்தோருகு திருக்கோவில்களுக்கு இலவச சிறப்பு யாத்திரை, ஓதுவார் பயிற்சி வகுப்புகள் என பலவற்றை நடத்தி வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பை அத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

70வது பிறந்தநாள் கொண்டாடும் தம்பதிகள் செய்யும் வழிபாட்டிற்கு பீமரத சாந்தி என பெயர். பொதுவாக இந்து சம்பிரதாயத்தில் 60 வயதை கடந்தவர்கள் ஷஷ்யப்த பூர்த்தியும், 70 வயதில் பீமரத சாந்தியும் செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறாக 70 வயது கடந்த பெற்றோருக்கு, தம்பதியருக்கு மணி விழா செய்வது புண்ணியத்தை தரும் என்பது இந்து மத நம்பிக்கை.

 

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மீக நாட்டம் உள்ள தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

20 இணை ஆணையர் மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு 100 தம்பதிகள் வீதம் 2000 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட உள்ளது. இந்த தம்பதிகளுக்கு ரூ.2,500 மதிப்பில் புடவை, வேஷ்டி, சட்டை, மாலை, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட 11 பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்