தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுமி! மதுரை தனியார் பள்ளியின் உரிமம் ரத்து!

Prasanth Karthick

புதன், 30 ஏப்ரல் 2025 (09:35 IST)

மதுரையில் பள்ளிக்கு சென்ற 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவத்தில், தனியார் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

மதுரையில் கே.கே.நகரில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் படித்து வந்த நிலையில், திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் குழந்தைகள் நடமாடும் பகுதியில் தண்ணீர் தொட்டியை அஜாக்கிரதையாக திறந்து வைத்திருந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது.

 

இந்நிலையில் சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து அந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும் என பெற்றோர்கள் கூறிவந்த நிலையில், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்