சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்!

செவ்வாய், 16 நவம்பர் 2021 (07:16 IST)
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது என்பதும் இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இப்பொழுதுதான் சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டுள்ள நிலையில் மீண்டும் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்