அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டண உணவு! – இன்று முதல் அமல்!

திங்கள், 15 நவம்பர் 2021 (13:03 IST)
சென்னையில் இன்று முதல் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டண முறை அமலுக்கு வந்தது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 403 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில் ஏழை, எளிய மக்களின் உணவு தேவையை நிறைவேற்றும் பொருட்டு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி கடந்த 10ம் தேதி முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் மழை பொழிவு நின்றதுடன், இயல்பு நிலையும் திரும்பியுள்ளதால் இன்று முதல் அம்மா உணகங்களில் வழக்கம்போல கட்டணம் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்