சென்னைக்கு மீண்டும் மிக கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

திங்கள், 15 நவம்பர் 2021 (13:37 IST)
சென்னையில் வரும் 17, 18 ஆம் தேதிகளில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது உருவான அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட திசையில் நகர்ந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவாகும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  
 
இந்நிலையில் தற்போது வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் சென்னையில் வரும் 17, 18 ஆம் தேதிகளில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு தமிழகத்தில் நவம்பர் 19 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்