தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் இன்னும் சில மணி நேரத்தில் மகாபலிபுரம் அருகே கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது
இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தேசிய பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை கொட்டப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் ஆகிய ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.