மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவைக் கரையைக் கடக்க உள்ளது. எனவே, புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு 2 மணி நேரமும்,அதன் பின் 2 மணி நேரமும், கிழக்கு கடற்கரைச்சாலை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4மணி நேரம் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது,