இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு?

புதன், 16 நவம்பர் 2022 (07:23 IST)
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே பெய்த மழை காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியில் இருக்கும் நிலையில் மீண்டும் மழை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்